விஜய்யின் தவெக மாஸ் சாதனை! பல நடிகர்களும் வாழ்த்து
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது . அதேவேளை 71.97 வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதன்படி, விஜய்யின் தவெக 107 இடங்களிலும் திமுக 70 இடங்களிலும் அதிமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் சரிபாதியை தவெக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜய்க்கு பல நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஜீவா விசில் அடித்து வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.
மேலும் கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில்,
Wow..!!! This is HISTORIC…!!! மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு...!
“விஜய் சார் அவர்களுக்கும், நமது அற்புதமான தமிழ்நாடு மாநில மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!!” என பதிவிட்டுள்ளார்.
Tags:
இந்திய செய்தி

