காட்டு யானை தாக்கி நால்வர் பலி!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, ஹரிகஸ்வெவ மற்றும் தணமல்வில பகுதிகளிலும் காட்டு யானைத் தாக்குதல்களில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக நாட்டில் மனித–யானை மோதல்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.