யாழில் சம்பவம் : அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறின் பின்னர், பெண்ணொருவர் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை சுன்னாகம் காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
மேலும், மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
