புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நடுவே சோகம்..! ஜப்பானில் சுமார் 12 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நேற்று இரவு 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நில அதிர்வு ஜப்பானின் கிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்களிடையே அச்சமும் கவலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது பாரிய சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
உலகம்
