மாறும் இன்றைய வானிலை…! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (20.01.2026) வெளியிடப்பட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவி வரும் குளிரான வானிலை நிலைமை, அடுத்த சில நாட்களில் மேலும் சற்று அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.