கிளிநொச்சியில் வேன் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து

 


கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ஒரு வேன், கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (22) காலை சுமார் 9.30 மணியளவில், பரந்தன் – பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதனிடையே, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.