வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி கழுத்து நெரித்துக் கொலை! காதலனுக்கு வலைவீசும் பொலிஸார்!
கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி, பெற்றோரும் சகோதரர்களும் நேற்று மாலை வெளியிடத்துக்குச் சென்ற வேளை வீட்டில் தனியாகத் தங்கியிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பில் யுவதியின் 25 வயது காதலன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார், தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
