பிரதமர் ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி எம்.பிக்கள் முடிவு!


பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.  

நேற்று (5) நடைபெற்ற அக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அதன்படி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற வலைத்தளத்திற்கான இணைப்பு வழங்கப்பட்டமை மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.