இரணைமடுக்குளத்தின் 6 வான்கதவுகள் திறப்பு; தாழ் நிலப்பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இவ்வாறு ஆறு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆறு வான்கதவுகளின் இரண்டுவான் கதவுகள் 06 இஞ்சிக்கும் நான்கு வான்கதவுகள் ஒரு இஞ்சிக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை எதிர்வு கூறல் காணப்படுகின்ற நிலையில் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி

