விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த காற்சட்டை - கைதான இளைஞர்!


பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டார்.

யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கைதான சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.