பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்ட சிகரெட் கடத்தல்!


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டு பெட்டிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சோதனைகளை மேற்கொண்டது. 

இதன் போது 60 அட்டைப்பெட்டிகள் அடங்கிய சுமார்  12,000 வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகள் மற்றும் 23,800 வெளிநாட்டு பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர் மத்துகம பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்தி வருகிறது.