லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை!
இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
