சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐந்து நபர்கள் உயிரிழப்பு - பெண்ணொருவர் கைது!


வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள்  வைக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.