பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு!


சந்தையில் பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் விலை ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும், பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பச்சை மிளகாய் செடிகள் முழுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பச்சை மிளகாய் உள்ளிட்ட ஏனைய சில மரக்கறிகளின் விலையும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.