பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகளின் விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசாங்க பாடசாலைகள் நாளை (21) மீண்டும் திறக்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 06 ஆங்கிலப் பாடத் தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தேசிய கல்வி நிறுவகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பிரதிப் பணிப்பாளர் நாயகனை கட்டாய விடுமுறையில் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.