குளத்தில் பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!
அநுராதபுரம், கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் குளத்தில் பூப்பறிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமைபதிவாகியுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
குளத்தில் தாமரை பூ பறிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
