வடக்கு புகையிரத பாதைகள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும்

வடக்கு புகையிரத மார்க்கத்தில் புனரமைப்புப் பணிகளுக்காக பல இடங்கள் இன்று திங்கட்கிழமை (19) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. மஹவ – அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும்.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூடப்படும். அதே சமயம், மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

மஹவ – ஓமந்தை இடையிலான பாதையில், ஐந்து புகையிரத பாலங்களை மாற்றுதல், யானைகள் கடந்து செல்லும் சுரங்கப்பாதையை புதுப்பித்தல் போன்ற பணி நடைபெறும். புனரமைப்புப் பணிகள் சிங்கள – தமிழ் புத்தாண்டிற்கு முன்பாக முடித்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமையான முறையில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய புகையிரத சேவைகளாக,நாளை முதல் ‘புலதிசி கடுகதி’ மற்றும் ‘உதயதேவி’ புகையிரத சேவைகள் இயக்கப்படவுள்ளன. மேலும், திருகோணமலை வரையிலான இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

அநுராதபுரம் – காங்கேசன்துறை மற்றும் ஓமந்தை – காங்கேசன்துறை இடையேயான சேவைகள் ‘யாழ் ராணி’ புகையிரத சேவையில் இணைக்கப்படும். (மிகவிரைவில், 27 ஆம் திகதி முதல்).