இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இன்று திங்கட்கிழமை (19) காலை 11.51 மணிக்கு, அந்தநாட்டு நேரப்படி, 6 ரிக்டர் ஸ்கேல் அளவில் இந்த நிலநடுக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது, ஆனால் இதுவரை எவ்வித சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இருப்பினும், தொடர்புடைய பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்திய தேசிய நிலஅதிர்வு மையம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.