பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்கள் - அரசு எடுத்த நடவடிக்கை!


பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.