இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி (RFI) கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்துள்ளது.
அவசர நிதியுதவிக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் விரைவான நிதி கருவி (RFI) கோரிக்கையை முன்னுரிமையாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்கும் என்று IMF ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
RFI இன் கீழ் வழங்கப்படும் ஆதரவு இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி அணுகலுடன் கூடுதலாகும் என்று IMF குறிப்பிட்டது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 5 ஆவது மீளாய்வினை நிறைவு செய்வதற்கான விவாதங்களை மீண்டும் தொடங்க 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் IMF குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.
மீளாய்வின் முடிவில் நாடு சுமார் 358 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்றும் IMF குறிப்பிட்டது.
Tags:
இலங்கை செய்தி
