5 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை! நாளை வரை அமுலில்
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை காலை 8 மணிவரை அமுலில் இருக்கும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
