இலங்கையில் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை!
இலங்கையின் சில பகுதிகளில் காய்கறிகளின் விலை உயர்வை எட்டியுள்ள தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புறக்கோட்டை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கத்தரிக்காயின் சில்லறை விலை 800 ரூபாவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்னறது.
மேலும் பச்சை மிளகாயின் விலை 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளதோடு, தக்காளி விலை 600 ரூபாயை தாண்டியுள்ளது.
இந்தத் தரவுகள் அனைத்தும் மத்திய வங்கியின் அன்றாட விலைப்பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை ஏற்றம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
