100 ரூபா தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை ; பத்து லட்சம் அபராதம்!
பலாங்கொடை - பெலிஹுல்ஓயா பகுதியில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு,பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நேற்று முன்தினம் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளால் பலாங்கொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கடை உரிமையாளர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்றைய தினம், குறித்த நபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
