காதலனுடன் சேர்ந்து போதைக்கு அடிமையான யுவதி - தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது.
மேற்படி யுவதி கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி யுவதி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
