பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை!


எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.335 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 92 ஆக்டேன் பெற்றோல் விலையில் மாற்றமில்லை.

அதேபோல், லங்கா ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.277 ஆகும். சூப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.