வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!


வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கீழே காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி – 29.1 மில்லியன் டொலர்கள்

பெப்ரவரி – 22.3 மில்லியன் டொலர்கள்

மார்ச் – 54.0 மில்லியன் டொலர்கள்

ஏப்ரல்- 145.6 மில்லியன் டொலர்கள்

மே – 125.2 மில்லியன் டொலர்கள்

ஜூன் – 169.6 மில்லியன் டொலர்கள்

ஜூலை- 206.0 மில்லியன் டொலர்கள்

ஆகஸ்ட்- 255.7 மில்லியன் டொலர்கள்.