லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!


மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,100 ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,645 ஆகவும் காணப்படுகிறது.