பாடசாலைக்கு மொபைல் தொலைபேசி கொண்டுவந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்!
மொனராகலையில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் ஆசிரியர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், பாடசாலைக்கு கைபேசி கொண்டு வந்தது தொடர்பாக வினவியமைக்காக குறித்த மாணவர் ஆசிரியரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இலங்கை செய்தி
