பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை!
பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி, 347 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 22 பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் 118 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 11 பேருந்துகள் பயணச்சீட்டு வழங்காமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டதாகவும் காமினி ஜாசிங்க தெரிவித்தார்.
முன்னர், சுமார் ஐம்பது சதவீத பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. தற்போது நிலைமை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை மிகக் குறைந்த சதவீதத்திற்குக் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி