சுமார் 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!


இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக குறைந்தது. அதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 370,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை 350,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. பிற்பகலில் 24 கரட் தங்கத்தின் விலை 350,000 ரூபாயிலிருந்து 340,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 322,000 ரூபாயிலிருந்து 312,000 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

இதனால், நேற்றைய நாளுடன் ஒப்பிடும்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை மொத்தம் சுமார் 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை உயர்ந்திருந்த தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.