2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சு சுற்றிக்கை!
2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புகளை 2026 ஜனவரி 20 ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதியன்று முறைப்படி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
Tags:
இலங்கை செய்தி