பொலிஸ் பிரிவுக்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டம்!
நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் குறித்த அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நியமிக்கப்படுவார்களென்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பிரிவுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 5,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 5,000 பேரை ஆட்சேர்ப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி