மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 17 மாடல் இன்று அறிமுகமாகிறது!
ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘iPhone 17’ மாடலை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று இரவு (09) 10:30 மணிக்கு தொடங்கும் நிறுவனத்தின் ‘Awe Dropping’ நிகழ்வில், iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max என நான்கு மாடல்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த தொடரின் (Series) அனைத்து மாடல்களும், iPhone 16 மாடல்களை விட அதிக மின்கலத் (Battery) திறனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஒழுங்குமுறை ஆவணங்களின்படி, குறிப்பாக iPhone 17 Pro மாடலில் மின்கலத் திறனில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படும்.
iPhone 16 Pro மாடல் 3,582 mAh மின்கலத் திறனைக் கொண்டிருந்தாலும், iPhone 17 Pro மாடலில் இது 4,252 mAh ஆக அதிகரிக்கலாம். இதனால் 18.7% உயர்வு ஏற்படும்; அதாவது கூடுதலாக 670 mAh திறன் சேர்க்கப்படும்.
iPhone 17 வெளியீட்டை ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தளங்கள் மூலம் நேரலையாகக் காணலாம்:
Apple அதிகாரப்பூர்வ இணையதளம் –
Apple.com
Apple TV App
Apple அதிகாரப்பூர்வ YouTube சேனல்
மேலும், இந்த ஆண்டு Apple நிறுவனம், iPhone 15 Pro மாடல்களில் பயன்படுத்திய டைட்டானியம் பிரேம்களுக்கு பதிலாக, மீண்டும் அலுமினிய பிரேம் வடிவமைப்பை Pro மாடல்களில் கொண்டு வர உள்ளது என்ற வதந்தியும் பரவியுள்ளது.
