கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த யுவதிக்கு நேர்ந்த சோகம்!


கனடாவின் ஸ்கார்பரோவைச் சேர்ந்த, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயது சத்தீஸ்வரன் சயினகா என்ற யுவதி, புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றது.

சுற்றுலா நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த அவர், வடமராட்சி கல்லுவம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார்.

குறித்த யுவதியின் இறுதி நிகழ்வுகள் இன்று கல்லுவத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளன.

இந்த திடீர் மரணம் காரணமாக வடமராட்சி கல்லுவம் பிரதேசம் துயரத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.