நான்கு அலங்கார மீன் இனங்களுக்கு தடை!


இலங்கையில் நான்கு அலங்கார மீன் இனங்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் பிரான்ஹா (Piranha), நைஃப் ஃபிஷ் (Knife Fish), அலிகேட்டர் கார் (Alligator Gar) மற்றும் ரெட்லைன் ஸ்நேக்‌ஹெட் (Redline Snakehead) ஆகிய மீன் இனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவ்வினங்களை இனப்பெருக்கம் செய்வது, நீர்நிலைகளில் விடுவது, கரைக்கு கொண்டு வருவது, எடுத்துச் செல்வது, வாங்குவது, விற்பது, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது, ஏற்றுக்கொள்வது, வைத்திருப்பது, இறக்குமதி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது ஆகிய அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.