கொழும்பின் பல பகுதிகளில் 9 மணி நேர நீர் விநியோகம் தடை!
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்வரும் வியாழக்கிழமை (18) ஒன்பது மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த பகுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
