அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 21,389 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 28.4 % ஆகும்.
பிரித்தானியாவிலிருந்து 5,714 பேர், ஜெர்மனியிலிருந்து 4,817 பேர், சீனாவிலிருந்து 4,056 பேர் மற்றும் பிரான்ஸிலிருந்து 3,834 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,641,881 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 346,984 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 156,855 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 120,314 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இவ் வருடம் ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 198,235 வெளிநாட்டினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது 2024 ஒகஸ்ட் தரவுகளுடன் ஒப்பிடும்போது 20.4% அதிகமாகும்.
