வாய்த்தர்க்கம் முற்றி மனைவியை வாளால் தாக்க முயன்ற கணவர் : மனைவியின் கோடரி வெட்டுக்கு இலக்காகி பலி!
மனைவி ஒருவர் தனது கணவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு, தனது மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்ததாக கெபத்திக்கொல்லாவ பொலிஸ் நிலையகம் தெரிவித்துள்ளது.
கெபத்திக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் (வயது 36 ) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் கெபத்திக்கொல்லாவ, குருலுகம, உக்குவவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான உபாலி ஹேரத் (46) என்பவர் ஆவார்.
தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மனைவியை வாளால் தாக்க முயன்றதாகவும், கோடரியால் கணவனின் தலையில் தாக்கியதில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
இலங்கை செய்தி
