வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு!
வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் எம்.பி.க்கள் அதற்கான விலையில் 25% பணத்தை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்ய எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (Urban Development Authority – UDA) செயற்படுத்தப்படும் வியத்புர வீட்டுத் திட்டம் (Viyathpura) ஒரு சமூக நலத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், வீட்டு உரிமையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.
Tags:
இலங்கை செய்தி