2025 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2025 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி, நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,787 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.