முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று இடம்பெற்ற நிலையில்  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு  தேசிய வைத்தியசாலையின்  விசேட வைத்திய குழுவினரின் பரிந்துரைக்கு அமைவாக இன்று ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

50 இலட்ச ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீர பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.