கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்!


இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25  ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

நபர் ஒருவர் தன்னிடம் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி லஞ்சம் கோருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு  முறைப்பாடு அளித்தமையை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்றுமுன் தினம் (18) மாலை  இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை காதி  நீதிமன்ற நீதிபதியையும் அவருக்கு   உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (19) கல்முனை  நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இருவரையும்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.