இன்றைய தினம் முதல் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் அமுல்!
0.55 சதவீதம் குறைக்கப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஜூலை 1 ஆம் திகதி முதல் வருடாந்த பஸ் கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என்று போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தாலும், கடந்த மாதம் முதலாம் திகதி நடந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி டீசல் விலை 15 ரூபா அதிகரித்துள்ளது.
புதிய எரிபொருள் விலை திருத்தத்தின்படி, பஸ் கட்டணங்களை 0.55 சதவீதம் மட்டுமே குறைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பொது சேவைக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணமான 27 ரூபா, இரண்டாவது கட்டணம் 35 மற்றும் 45 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பஸ் கட்டணக் குறைப்பு பொது சேவைகள், அரை சொகுசு சேவைகள், சூப்பர் சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து பஸ்களுக்கும் பொருந்தும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.