இளைஞர்களுக்கு மன நிலை மாற்றும் மருந்துகளை விற்பனை செய்த குற்றத்தில், மருத்துவர் கைது!


மட்டக்களப்பின் கிரான் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த மருத்துவர் ஒருவர், இளைஞர்களுக்கு மன நிலை மாற்றும் மருந்துகளை (Psychoactive drugs) விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கிடைத்த தகவலின் பேரில், மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினர் கிரான் பகுதியில் கூட்டு சோதனை நடத்தி, கைது செய்தனர்.

மருந்துச் சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு PREGAB 150mg வழங்கியதற்காக மருந்தகத்தின் MBBS தகுதி பெற்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

வாழைச்சேனை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.