மீன்களின் விலையில் திடீர் அதிகரிப்பு..!


புத்தளம் உடப்பு கிராமத்தில் தற்போது தென்மேல் பருவக்காற்றின் வேகம் அதிகரித்த நிலையில்,கடல் மீன்கள் குறைந்து காணப்படுகின்றன.

அதேவேளை கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

அதேநேரம் முந்தல் பிரதேச சிறுகடல் பகுதியிலிருந்து பலவகையான மீன்கள் பிடிக்கப்பட்டு உடப்பு மீன் சந்தையில் இன்றையதினம்(16) ஏலம் விடப்பட்டது.

இதனடிப்படையில் யப்பான் மீன் கிலோ 700 ரூபாவாகவும், நண்டு 700ரூபாவாகவும்,  இறால் 1500ரூபாவாகவும், ஏனைய மீன்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.