கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குழு!
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது தினத்தன்று கூட கல்விச் செயலாளரைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கல்விச் செயலாளரைச் சந்திக்க வருவது இது பத்தாவது முறை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி