உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் அரசுக்கு அமோக வெற்றியல்ல..!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு 43 % வாக்குகளை ஆளும் கட்சி பெற்றுள்ளமையை அமோக வெற்றி என அரசு கூறுவது நகைப்புக்குறிய விடயமாகும்.
இவ்வாறு பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மக்கள் விடுதலை முன்னனி அவர்களின் தேர்தல் பெறுபேற்றினை 2018 தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு பேசுகிறார்.அப்போது மஹிந்த ராஜபக்ஷ ஒரு சாதாரன பாராளுமன்ற உறுப்பினர் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து 49 இலட்சம் வாக்குகளை நாம் பெற்றோம்.
எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு 43 % வாக்குகளை ஆளும் கட்சி பெற்றுள்ளமையை அமோக வெற்றி என அரசு கூறுவது நகைப்புக்குறிய விடயம். கடந்த தேர்தலை விட 23 இலட்சம் வாக்குகள அரசு இழந்துள்ளது.இது அமோக வெற்றி அல்ல படு தோல்வி என்றே கூறவேண்டும் என கூறினார்.
Tags:
இலங்கை செய்தி