உப்பின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு!


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 2,800 மெற்றிக் தொன் உப்பு வரும் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலுடன், தேசிய உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்துள்ளது. மேலும் அதில் 2,800 மெற்றிக் தொன் முதல் தொகுதி நாட்டிற்கு வழங்கப்படும் என்று தேசிய உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் துவான் மன்சில் தெரிவித்தார்.

உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் அயடின் கலக்காத உப்பு நாட்டை வந்தடைந்ததும், அது அயடின் கலக்கப்பட்டு 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய உப்பு நிறுவனத்தைத் தவிர, லங்கா உப்பு நிறுவனம் 10,000 மெற்றிக் தொன் உப்பையும், மீன்வள அமைச்சு 10,000 மெற்றிக் தொன் உப்பையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் என்று தொழில்துறை மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.