மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை! - நகைப்பிரியர்கள் கவலை


இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்றைய தினம் (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 245,000 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கடந்த புதன்கிழமை, தங்கம் விலை 240,500 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 260,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 265,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.