கணக்காய்வாளரின் பதவிகாலத்தை நீடிப்பதற்கு அனுமதி!


தற்போதைய கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவை மேலும் ஆறு மாதங்களுக்குப் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையை அரசியலமைப்புச் சபை நேற்றைய தினம் (22) அங்கீகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் அங்கீகரித்ததாக அறியமுடிகிறது.